டில்லி

ட மாநிலங்களில் பெரும்பாலான இடங்களில் வெட்டுக்கிளிகள் தாக்குதலால் 27 வருடங்களாக இல்லாத அளவுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் இருந்து கூட்டம் கூட்டமாக வரும் வெட்டுக்கிளிகள் தாக்குதலால்  வட இந்தியாவில் பல மாநிலங்களில் பயிர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.  இந்த லோகஸ்ட் வெட்டுக்கிளிகள் ஏற்கனவே சோமாலியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் உள்ள பயிர்களை அழித்துள்ளன.   இப்போது இந்தியாவில் ராஜஸ்தான், பஞ்சாப்,, அரியானா,மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இவை தாக்குதல் நடத்துகின்றன,

இவ்வாறு வெட்டுக்கிளிகள் நாடு விட்டு நாடு பறந்து வருவது இந்தியாவில் இந்த ஆண்டு விவசாயத்தில் கடுமையாகப் பாதிக்கும் என ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது. பலருக்கும் சின்னஞ்சிறிய வெட்டுக்கிளிகள் இவ்வளவு பாதிப்பை உண்டாகுமா என்னும் சந்தேகம் இருக்கலாம்.  இது குறித்து இப்போது பார்ப்போம்.

லோகஸ்ட் வெட்டுக்கிளிகள் தனியாக வந்தால் பயப்பட வேண்டியதில்லை  ஆனால் அவை கூட்டமாக வரும் போது அங்கு விவசாயமே செய்ய முடியாத அளவுக்கு இவை பாதிப்பை உண்டாகும்.  இந்த லோகஸ்ட் வெட்டுக்கிளிகள் மழை பெய்து ஈரம் இருக்கும் இடங்கலில் மேலும் உற்பத்தியாகும்.

குறிப்பாக ஆப்ரிக்காவில் உருவாகும் லோகஸ்ட் வெட்டுக்கிளிகள் மிகவும் ஆபத்தானவை ஆகும்  இந்த வகை வெட்டுக்கிளிகல் ஒரு சதுர கிலோ  மீட்டர் பரப்பளவில் கோடிக் கணக்கில் உருவாகும்.   இந்த வகை வெட்டுக்கிளிகளின் ஆயுட்காலம் சுமார் 6 மாதங்கள் ஆகும்.  இவை பயிர்களை அழித்தால் அந்த பகுதி முழுவதுமே உணவுப் பஞ்சம் ஏற்படக்கூடும்..

இந்த பூச்சிகள் ஆப்ரிக்காவில் உருவாகி ஏமன், ஈரான், பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்குள் நுழைகின்றன.  இவை வரும் வழி எல்லாம் இனப்பெருக்கம் செய்கின்றன.  இவைதான் அதிக அளவில் பயிர்களை நாசம் செய்கின்றன.    இவை சாதாரண வெட்டுக்கிளிகளில் இருந்து மாறுபட்டது ஆகும்.  இந்த வகை வெட்டுக்கிளிகள் தனது எடையைப் போன்ற பயிர்களை தினமும் தின்று அழிக்கக்கூடும்.

இவ்வாறு ஒரு சதுர கிமீ அளவில் உள்ள பூச்சிகள் ஒரே நாளில் 35000 மக்களின் உணவை உண்ணக் கூடியவை ஆகும்.  இந்த பூச்சிகள் தினசரி 150 கிமீ தூரம் வரை பறக்கக்கூடியவை, அவ்வப்போது இந்திய பெருங்கடலில் உண்டாகும் ப்யல்களல இவை இந்தியப் பாகிஸ்தான் எல்லையில்  வந்துள்ளன. இவற்றால் தற்போது இந்தியாவில் கடந்த 27 ஆண்டுகளாக இல்லாத அளவு மோசமான பயிர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த பூச்சிகளின் கூட்டம் சுமார் 2.5 கிமீ முதல் 3 கிமீ வரை பரவி உள்ளன.  நிலங்கள் பச்சை பசேல் என்று காணப்பட்டால் அங்கு லோகஸ்ட் வெட்டுக்கிளிகள் படையெடுத்து பயிர்களை அழித்து வருகின்றன.   தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும் 33 மாவடங்களில் இவை பரவி உள்ளன.  ராஜஸ்தான் தீயணைப்புத் துறை இவற்றை அழிக்கத் தயார் நிலையில் உள்ளது    ஏற்கனவே கொரோனாவால் விவசாயம் பாதிப்படைந்துள்ள நிலையில் இந்த வெட்டுக்கிளிகள் படையெடுப்பு விவசாயிகளை மேலும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது.