டோக்கியோ

ப்பானில் கொரோனா தொற்றின் வேகம் குறைந்துள்ளதால் ஊரடங்கை நீக்க உள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.

உலகெங்கும் பரவி வரும் கொரோனா தொற்றால் சுமார் 16550 பேர் பாதிக்கப்பட்டு 820 பேர் மரணம் அடைந்துள்ளனர்.   எனவே அந்நாட்டில் உள்ள 47 மாகாணங்களிலும் ஊரடங்கு அமலில் உள்ளது. முதலில் ஏப்ரல்16 முதல் நீட்டிக்கப்பட்டது.  அதன்பிறகும் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.

டோக்கியோ நகரில் வரும் ஜூலை மாதம் 24 முதல் ஆகஸ்ட் 9 வரை ஒலிம்பிக் போட்டிகள் நடக்க இருந்தன.   கொரோனா அச்சம் காரணமாக இந்த போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.  அனைத்து விளையாட்டு வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் பாதுகாப்பாக உணர வேண்டும் என்பதால் போட்டிகளை நிறுத்தி உள்ளதாக ஜப்பான் அறிவித்திருந்தது.

தற்போது ஜப்பானில் கொரோனா பரவுதல் சற்று குறைந்துள்ளது.  இதனால் ஊரடங்கு உத்தரவைத் திரும்பப் பெற உள்ளதாகப் பிரதமர் ஷின்சோ அபே அறிவித்ஹ்டுள்ளார்.  விரைவில் ஜப்பான் முழுவதும் ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படும் எனவும் ஆனால் முக கவசம் அணிவது, சமூக விலகல் உள்ளிட்டவை கட்டாயமாக்கப்படும் எனத் தெரிய வந்துள்ளது.