சென்னை:
மிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய வகையில், இதுவரை  (25ந்தேதி காலை 10 மணி நிலவரப்படி)  4லட்சத்து 20 ஆயிரத்து 688 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அபராதமாக இதுவரை , ரூ.7 கோடி 63 லட்சம்  அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா லாக்டவுன் காரணமாக தேவையின்றி பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. இருந்தாலும், தேவையின்றி ஏராளமானோர் வாகனங்களி வெளியே சுற்றித்திரிந்து வருகின்றனர்
இந்த நிலையில் தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றியி 4,20,688 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும், அவர்களிடம் இருந்து  ரூ.7 கோடியே 63 லட்சம் கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.
மேலும் தடையை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 5,26,507 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளன.  இதுவரை 4,94,770 வழக்குகள் பதிவாகியுள்ளன என்று காவல்துறை தெரிவித்துள்ளது.