சென்னை:
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உச்சம் அடைந்து வருகிறது. தற்போது மொத்த பாதிப்பு 16,277 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து இதுவரை 8,324 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தலைநகர் சென்னையில் நேற்று ஒரே நாளில் 587 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,576 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று (25ந்தேதி) காலை 9 மணி நிலவரப்படி, 15 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
அதன்படி, ராயபுரம் மண்டலம் தொடர்ந்து முதலிடத்தில் உளளருது. அங்கு இதுவரை 1,981 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, கோடம்பாக்கத்தில் 1,460 பேருக்கும், திரு.வி.க.நகரில் 1,188 பேருக்கும், அண்ணாநகரில் 867 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
தண்டையார்பேட்டையில் 1044 பேரும், தேனாம்பேட்டையில் 1118 பேரும், திருவொற்றியூரில் 300 பேரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வளசரவாக்கத்தில் 703 பேருக்கும், பெருங்குடியில் 168 பேருக்கும், அடையாறில் 579 பேருக்கும், அம்பத்தூரில் 446 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஆலந்தூரில் 121 பேருக்கும், மாதவரத்தில் 223 பேருக்கும், சோழிங்க நல்லூரில் 173 பேருக்கும், மணலியில் 142 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

Patrikai.com official YouTube Channel