டெல்லி:
டிரைவிங் லைசென்ஸ், வாகன இன்சூரன்ஸ் புதுப்பிக்க ஜூலை 31 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.
கொரோனா லாக்டவுன் மே 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் எந்தவித அரசு மற்றும் தனியார் பணிகளும் நடைபெறாமல் முடங்கி உள்ளது. தற்போது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு தொழில் நிறுவனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், ஊரடங்கால் முடங்கியுள்ள வாகன இன்சூரன்ஸ், ஓட்டுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம் புதுப்பிப்பு போன்றவற்றிற்கான கால அவகாசம், ம் ஜூன் மாதம் 30 ம் தேதி வரையில் செல்லுபடியாகும் என ஏற்கனவே மத்திய அரசு அறிவித்தது. இந்த நிலையில், தற்போது அவகாசத்தை ஜூலை 31 வரையில் மத்தியஅரசு நீட்டித்து அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய வாகன போக்குவரத்துதுறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அனைத்து மோட்டார் வாகன சம்பந்தப்பட்ட விவகாரங்கள் ஜூன் 30 வரையில் செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அவை ஜூலை 31 வரையில் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இதனையடுத்து எந்த வித அபராத கட்டணம் இன்றி நடவடிக்கையை மேற்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.