கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளதால், திருப்பதி உள்பட அனைத்து மத வழிப்பாட்டு தலங்களும் மூடப்பட்டன. தற்போது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், திருப்பதி கோவிலிலும் தரிசனத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையில் ஊரடங்கு காரணமாக லட்சக்கணக்கான லட்டுகள் தேக்கமடைந்துள்ளதால், லட்டுகளின் விலையை பாதியாக குறைத்து (ரூ.50-ல் இருந்து ரூ.25 ஆக) விற்பனை செய்ய தேவஸ்தானம் அனுமதித்துள்ளது.
ஏழுமலையான் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படும் வரை இந்த விலை குறைப்பு அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து, திருப்பதி லட்டுகளை மொத்தமாக ஆயிரத்துக்கும் மேல் வாங்கி மற்றவர் களுக்கு கொடுக்க விரும்பும் பக்தர்கள் தங்கள் பெயர், வயது, முகவரி, செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களை 5 நாள்களுக்கு முன்பாக தேவஸ்தானத்துக்கு tmlbulkladdus@gmail.com என்ற மூலம் மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் என்றும், அவர்களது விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, லட்டுகள் கொடுக்கப்படும். அதன்படி, திருப்பதியில் உள்ள தேவஸ்தான அலுவலக கவுன்ட்டரிலோ அல்லது அவர்கள் அருகில் உள்ள தேவஸ்தான தகவல் மையங்கள் மூலமாகவோ லட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்து உள்ளது.
மேலும், லட்டு வாங்க வரும் பக்தர்கள் கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். முகக்கவசம் அணிந்து வர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அதுபோல பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து வந்த இணையதள முகவரியை மாற்ற உள்ளதாகவும் அறிவித்து உள்ளது.
அதுபோல பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து வந்த இணையதள முகவரியை மாற்ற உள்ளதாகவும் அறிவித்து உள்ளது.
ஏற்கனவே ஏழுமலையான் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்ய தேவஸ்தானம் https://ttdsevaonline.com என்ற இணையதளத்தை உருவாக்கியது. இந்த இணையதளம் வாயிலாக பக்தர்கள் ஏழுமலையான் சிறப்பு விரைவு தரிசனம், ஆர்ஜித சேவா ஸ்ரீவாணி அறக்கட்டளை நன் கொடையாளர்களுக்கான தரிசனம், வாடகை அறைகள் உள்ளிட்டவற்றை முன்பதிவு செய்து வந்தனர்.
தற்போது அந்த இணையதள முகவரி மாற்றப்பட்டு உள்ளது. பக்தர்கள் இனிமேல், https:/tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் தங்களின் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். இன்று முதல் இந்த இணையதளம் செயல்பட தொடங்கும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
Patrikai.com official YouTube Channel
