சென்னை:
மிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் உச்சமடைந்து வருகிறது. இன்று புதிதாக 786 பேருக்கு பாதிப்பு உறுதியானதைத் தொடர்ந்து,   தற்போது 14ஆயிரத்து 753 ஆக உயர்ந்துள்ளது.  நாளை 15ஆயிரத்தை கடந்துவிடும் என எதிர்பார்ப்பு  ஏற்பட்டு உள்ளது.
எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க சரியான நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறி வருவதால், பாதிப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உச்சமடைந்து வருகிறது.

இன்று மேலும் 4 பேர் பலியானதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 98 ஆக உயர்ந்துள்ளது.
நோய்த்தொற்றில் இருந்து குணமாகி இன்று846 பேர் வீடு திரும்பியதைத் தொடர்ந்து, இதுவரை 7128  பேர் குணமாகி உள்ளனர்.
இன்று புதிதாக பாதிக்கப்பட்டுள்ள 786 பேரில் 569 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.
இன்று பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 92 பேர் வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், அவர்களில் 66 பேர் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து தமிழகம் திரும்பியவர்கள், 13 பேர் டெல்லி, 6 பேர் மேற்குவங்கம், 2 பேர் ஆந்திரா, குஜராத், மத்தியபிரதேசம், ஒடிசா, தெலுங்கானா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் இருந்து திரும்பிய தலா ஒருவர்.
மே 22 நிலவரப்படி சோதனை புள்ளிவிவரங்கள்:
தமிழகத்தில் இதுவரை 3,85,185  பேருக்கு கொரோனா பரிசோதனை  மாதிரிகள் சோதிக்கப்பட்டன.
இன்று 12,046 நபர்கள் பரிசோதிக்கப்பட்டனர்.
தமிழகத்தில்  503 சோதனை நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன.
கொரோனா பாதிப்புக்குள்ளானோரில்  12 வயதிற்குட்பட்ட குழந்தைகள்  902 பேர்.
இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளர்.