டெல்லி: உலக சுகாதார அமைப்பின் நிர்வாக குழு தலைவராக காணொலி காட்சி மூலம் பதவியேற்றார் மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்.
ஜெனீவாவில் உலக சுகாதார அமைப்பு சார்பில் 73வது கூட்டத்தொடர், சில நாட்களுக்கு முன்பு காணொளி காட்சி மூலம் நடைபெற்றது. 194 நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
34 உறுப்பினர்களைக் கொண்ட உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக் குழுவின் தலைவரான ஜப்பானைச் சேர்ந்த டாக்டர் ஹிரோகி நகதானி நிர்வாகக்குழுத் தலைவராக இருந்துவந்தார். அவரது பதவிக்காலம் முடிவடையும் சூழலில் அப்பதவிக்கு ஹர்ஷ்வர்தன் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய குழு, இந்தியாவைச் சேர்ந்தவரே இந்த அமைப்பிற்கு அடுத்த தலைவராக வரவேண்டும் எனக் கடந்த ஆண்டு ஒருமனதாக முடிவெடுத்த நிலையில், தற்போது ஹர்ஷ்வர்தன் அதன்படி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அடுத்த மூன்று ஆண்டுகள் அவர் இப்பதவியில் நீட்டிப்பார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந் நிலையில் அவர் இன்று நிர்வாக குழு தலைவராக காணொலி காட்சி மூலம் பொறுப்பேற்றுக் கொண்டார்.
Patrikai.com official YouTube Channel