சென்னை:
மிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள்  மேலும் தீவிரமடைந்துள்ளது. நேற்று புதிதாக 776 பேருக்கு பாதிப்பு உறுதியான நிலையில்,  அவர்களில் 567 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். இதன் காரணமாக கொரோனா பாதிப்பு சென்னையில்   8,795 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில், தற்போது நோய் பாதிப்பு உள்ளானவர்கள் 5624 பேர் என்றும், குணம் அடைந்தவர்கள் 3062 பேர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் பலி எண்ணிக்கை 64 ஆக அதிகரித்து உள்ளது.

சென்னையில் உற்ளள 15 மண்டலங்களில்  ராயபுரம் மண்டலமே பாதிப்பில் உச்சம் அடைந்து உள்ளது. அதையடுத்து, கோடம்பாக்கம், திருவிக நகர் ஆகிய மண்டலங்களில் மட்டுமே சுமார் 4 ஆயிரம் கரோனா நோயாளிகள் இருக்கிறார்கள்.  மொத்த பாதிப்புகளில் இதுவே  50% ஆகும்.
ராயபுரம் மண்டலத்தில், 1,699 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதற்கு அடுத்து, கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,231 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். திருவிக நகரிலும் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டிவிட்டது.

[youtube-feed feed=1]