வாஷிங்கடன் :
திறந்த வான்வெளி ஒப்பந்தம் (Open Skies Treaty) எனும் ஆயுத கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேற முடிவு, இதன் மூலம் இனி அமெரிக்கா ராணுவ தளவாடங்கள் குவிப்பதில் எந்த தடையும் இருக்காது.
திறந்த வான்வெளி ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒரு நாட்டின் ராணுவத்தை ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கண்காணிப்பு விமானங்களை கொண்டு குறுகிய கால அறிவிப்பில் சோதனை நடத்த அனுமதிக்கிறது. கண்காணிப்பு விமானங்கள் மூலம் இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள நாடுகளின் பிராந்தியத்தில் ராணுவ நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்தலாம் மேலும் புகைப்படம் எடுக்கலாம், இதன்மூலம் இந்த நாடுகள் தங்களுக்கு இடையிலான மோதல்களை தவிர்க்க வழிவகுக்கும்.
இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா ரஷ்யா உள்ளிட்ட 35 நாடுகள் கையெழுத்திட்டுள்ளது. ஐரோப்பாவை அச்சுறுத்த கூடிய நடுத்தரதூரம் சென்று தாக்கக்கூடிய அணு ஆயுதங்களை ரஷ்யா குவித்துவருவதை கண்காணிக்க அமெரிக்க உளவு விமானங்களுக்கு அனுமதி அளிக்காததை காரணமாக கூறி அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுகிறது.
“ரஷ்யா இந்த ஒப்பந்தத்தை பின்பற்றவில்லை. எனவே அவர்கள் கடைபிடிக்கும் வரை நாங்கள் வெளியேறுவோம்” என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
டிரம்பின் இந்த அறிவிப்பு மிகவும் கவலையளிப்பதாகவும் இது ராணுவ நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் என்றும் அமெரிக்கா தனது முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்