பெங்களூரு:
சோனியா காந்தி மீதான புகாரை வாபஸ் பெறுங்கள் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு மாநில காங்கிரஸ் கட்சித்தலைவர் டி.கே.சிவகுமார் கடிதம் எழுதி உள்ளார்.
பிரதமரின் நிவாரண நிதி குறித்து காங்கிரஸ் கட்சியின் டிவிட்டர் பக்கத்தில், பிஎம் கேர்ஸ் நிதியில் வெளிப்படைத்தன்மை இல்லை. அதில் கடைபிடிக்கப்படும் ரகசியம் எப்போதும் கெட்ட விஷயங்களுக்கான வழி என்று விமர்சிக்கப்பட்டது.

இதுதொடர்பாக கர்நாக மாநிலம் ஷிவமோகா பகுதியில் பாஜகவினர் தரப்பில், காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் மாநில காவல்துறை 2 பிரிவின் கீழ் சோனியாகாந்தி உள்பட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்த நிலையில், கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் டி.கே.சிவகுமார் முதல்வர் எடியூரப்பாவுக்கு அவசர கடிதம் எழுதி உள்ளார்.
அதில், சோனியா மீதான அவதூறு வழக்கு தொடர்பான புகாரை வாபஸ் பெறுங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.