சென்னை:
கொரோனா ஊரடங்கால் உலகம் முழுவதும் கர்ப்பம் அதிகரித்து உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில், சென்னையில் 134 கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மார்ச் 24ந்தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் அனைத்து தரப்பினரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.
இந்த சூழலில்தான், பிரபல கிராமியப் பாடகர் புஷ்பவனம் குப்புசாமியின் மகள் டாக்டர் பல்லவி, தனது முகநூலில் கிண்டலாக ஒரு பதிவை போட்டிருந்தார். அதில், “வீட்டில் பாதுகாப்பாக இருங்க.. நிறைய லவ் பண்ணுங்க நோ பேபி… நிறைய pregnant patient வர்றாங்க.. என்னடா பண்றீங்க” என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
தற்போது அவரது பதிவு உண்மையாகி உள்ளது தெரிய வந்துள்ளது. ஏராளமான இளந்தம்பதிகள் தற்போது கருவுற்றிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்த சந்தோஷமான சூழலில்தான் சென்னையில் கொரோனா தொற்றும் தீவிரமாகி வருகிறது. , சென்னையில் மட்டும் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில், 134 கர்ப்பிணி பெண்களுக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.
இது பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.