80 மற்றும் 90-களில் போதையேற்றும் கண்களுடன் ஈடு இணையில்லாத கனவுக்கன்னியாக வலம் வந்து இளைஞர்கள் மட்டுமல்ல வயோதிகர்களின் தூக்கத்தையும் சேர்த்து கெடுத்தவர் சில்க் ஸ்மிதா.

ஆந்திராவைச் சேர்ந்த விஜயலட்சுமி என்னும் இவர் 1979-ல் நடிகர் வினு சக்கரவர்த்தியால் வண்டிச்சக்கரம் படத்தில் சில்க் என்னும் பாத்திரத்தில் அறிமுகப்படுத்திட்டு பின்னர் அதுவே அவரின் திரைப்பெயராக நிலைத்துவிட, 1996 வரை தமிழ் திரையுலகில் தவிர்க்கவே முடியாத ஓர் நட்சத்திரமாக ஜொலித்தவர் சில்க் ஸ்மிதா. கிட்டத்தட்ட 450 படங்களுக்கும் மேலாக நடித்து ரசிகர்களை தனது செக்ஸியான தோற்றம் மற்றும் கவர்ந்திழுக்கும் கண்களால் கட்டிப்போட்டிருந்த சில்க் ஸ்மிதா தனது சொந்த வாழ்க்கையில் சந்தித்த தோல்விகளால் அடைந்த விரக்தியில் 1996-ல் தற்கொலை செய்து கொண்டார்.
தற்போது டிக் டாக்கில் அவரைப்போலவே தோற்றம் கொண்ட தாரா என்னும் பெண் பலவிதமான வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இவரின் சில்க் ஸ்மிதா போன்ற தோற்றம் நிஜமாகவே ஸ்மிதா மீண்டும் பிறந்து வந்து விட்டதை போன்ற உணர்வினை ஏற்படுத்தி இவருக்கு பல்லாயிரக்கணக்கான பாஃலோயர்ஸை அளித்துள்ளது. இவர் ஸ்மிதாவை போலவே பேசி பாடி வெளியிட்டுள்ள வீடியோக்கள் 2.9 மில்லியன் லைக்குகளை வாரிக்குவித்துள்ளது.
TharaR.K என்னும் பெயரில் ஸ்மிதாவின் மேனரிசங்களை அப்படியே அவரின் உடல் மொழியுடன் வெளியிட்டு பலதரப்பட்ட ரசிகர்களை மகிழ்வித்து வரும் இவர் 80-களில் நாம் பார்த்த அதே சில்க் ஸ்மிதாவை நினைவுபடுத்துகிறார். அதனாலேயே அதிகளவிலான ரசிகர்களை பெற்று முன்னணி டிக்டாக் வீடியோ பதிவாளராக வலம் வருகிறார் இந்த நவீன சில்க் ஸ்மிதாவின் வெர்சன் 2.0
– லெட்சுமி பிரியா
Patrikai.com official YouTube Channel