வாஷிங்டன்
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 99,723 உயர்ந்து 50,82,680 ஆகி இதுவரை 3,29,294 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 99,723 பேர் அதிகரித்து மொத்தம் 50,82,660 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 4740 அதிகரித்து மொத்தம் 3,29,294 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 20,20,157 பேர் குணம் அடைந்துள்ளனர். 45, 803 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,408 பேர் அதிகரித்து மொத்தம் 15,91,991 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1461 அதிகரித்து மொத்தம் 94,994 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 3,70,076 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 17,815 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,764 பேர் அதிகரித்து மொத்தம் 3,08,705 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 135 அதிகரித்து மொத்தம் 2,972 பேர் உயிர் இழந்துள்ளனர். தற்போது 2300 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,472 பேர் அதிகரித்து மொத்தம் 2,93,357 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 911 அதிகரித்து மொத்தம் 18,894 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,16,683 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 8318 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
ஸ்பெயினில் நேற்று 721 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 2,79,524 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு நேற்று 110 பேர் உயிரிழந்து மொத்த எண்ணிக்கை 27,888 ஆகி உள்ளது.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5553 பேர் அதிகரித்து மொத்தம் 1,12,028 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 132 அதிகரித்து மொத்தம் 3434 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 45,422 பேர் குணம் அடைந்துள்ளனர்.