சென்னை:
தமிழகத்தில் உரடங்கு தடையை மீறி வாகனங்களில் வெளியே சென்று கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை 4லட்சத்து 98ஆயிரத்தை கடந்துள்ளது. விரைவில் 5 லட்சத்தை எட்டும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் உரடங்கு தடையை மீறி வாகனங்களில் வெளியே சென்று கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை 4லட்சத்து 98ஆயிரத்தை கடந்துள்ளது. விரைவில் 5 லட்சத்தை எட்டும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்று காலை 9 மணி நிலவரப்படி, தமிழகத்தில், ஊரடங்கை மீறியதாக 4, 98, 501 பேர் கைது செய்யப்பட்டுள்ளன.
இதுவரை 4, 70, 338 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. 4, 98, 501 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 4, 07, 118 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன
விதிகளை மீறியவர்களிடம் இருந்து இதுவரை சுமார் 6,54 ,82, 244 ரூபாய் பணம் அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Patrikai.com official YouTube Channel