ல்வேறு விலங்கினங்கள் கால மாற்றத்தால் அழிந்துவருகிறது. பல விலங்கினங்கள் மனிதர்களாலும் அழிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அழிந்துபோன அரிய வகை புலியான  டாஸ்மானியன் புலி குறித்த வீடியோ ஒன்று சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பெச்சமின் என்று பெயரிடப்பட்ட அந்த புலி தொடர்பான வீடியோவை 85 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது  NFSA எனப்படும், (NFSA -National Film and Sound Archive of Australia) ஆஸ்திரேலியாவின் தேசிய திரைப்படம் மற்றும் ஒலி காப்பகம்  வெளியிட்டுள்ளது.

உணவுக்காக விலங்கினங்களை வேட்டையாடுவதில் கில்லாடியான இந்த புலி ஆஸ்ரேலிய வனங்களில் காணப்பட்டதாகவும், தற்போது இந்த அரிய வகை புலியினங்கள் உலகில் எங்கும் காணப்படவில்லை என்று என்எஃப்எஸ் ஏ தெரிவித்து உள்ளது.
கடைசியாக காணப்பட்ட டாஸ்மானியன் புலியின் பெயர் பெஞ்சமின். இது டாஸ்மானியாவில் இருந்த விலங்கியல் பூங்காவில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தது. ஆனால், 1936 ஆம் ஆண்டு, செப்டம்பர் 7 ஆம் தேதி பெஞ்சமின் உயிர் இழந்தது.
முன்னதாக  1935 ஆம் ஆண்டு, அந்த அரிய வகை புலி குறித்து  வீடியோவாக படம் எடுத்து பத்திரப்படுத்திஉள்ளனர். தற்போது அதை National Film and Sound Archive of Australia (NFSA) என்னும் அமைப்பு ஆன்லைனில் வெளியிட்டுள்ளது.
இந்த வீடியோ வைரலாகி வருகிறது.  சுமார் 21 நொடி மட்டுமே ஓடும் இந்த வீடியோ 85 ஆண்டு களுக்கு பிறகு வெளியாகி உள்ள பார்ப்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

‘Tasmania the Wonderland’ என்னும் பயனக் குறிப்பு வீடியோவிலிருந்துதான் பெஞ்சமினின் வீடியோ பிரித்து எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த வீடியோவில் டாஸ்மானியா பிலி குறித்து பேசும் நபர்,   “இதுதான் தற்போது உலகிலேயே மனிதர்கள் பிடியில் உள்ள ஒரேயொரு டாஸ்மானியன் புலி. மனித நாகரீகத்தால் இவை அழிவிற்குத் தள்ளப்பட்டுள்ளன,” என்கிறார்.

Video thanks: NFSA ,