தீபாவளிக்கு முன்பாக 84 தமிழ்த் திரைப்படங்கள்  தியேட்டர்களில் ரிலீஸ்?

தியேட்டர் அதிபர்கள் உள்ளிட்ட ஒட்டு மொத்த தமிழ்த் திரை உலகம் இன்னும் நம்பிக்கையோடு காத்திருக்கிறது.

‘’கொரோனவை கடந்து போவோம்’’ என அவர்கள் சொல்ல ஆரம்பித்துள்ளனர்.

படப்பிடிப்புக்கு பிந்தைய டப்பிங், பின்னணி இசை சேர்ப்பு போன்ற பணிகளுக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசு, ஷுட்டிங் செல்லவும், தியேட்டர்களை திறக்கவும் விரைவில் அனுமதிக்கும் என்பது அவர்கள் திடமான நம்பிக்கை.

பல படங்கள் அனைத்து வேலைகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளன.

சில படங்களின் ஷுட்டிங் , ஒன்றிரண்டு நாட்கள் மட்டுமே பாக்கி உள்ளது.

அனுமதி கிடைத்ததும், அந்த படங்களும் ரிலீசுக்கு தயார்.

கிட்டத்தட்ட தீபாவளிக்கு முன்னதாக 84 படங்களைத் திரைக்குக் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளது, சினிமா உலகம்.

தியேட்டர் உரிமையாளர்கள் கீழ்க்கண்ட விதிமுறைகளைக் கடைப் பிடித்து படங்களை ரிலீஸ் செய்ய ஆயத்தமாகி விட்டனர்..

+ தியேட்டர் வாசலில் தெர்மல் சோதனை.

+ வாசல்களில் சானிடேசன் செய்யப்படும். முகக்கவசங்கள் வழங்கப்படும்.

+ ஒவ்வொரு காட்சி முடிந்ததும் ஒட்டு மொத்த தியேட்டர் மற்றும் கழிப்பறைகள் சுத்தம் செய்யப்படும்.

+ உள்ளே வரவும், வெளியே செல்லவும் கூடுதல் வாசல்கள் திறக்கப்படும்.

+ பாதி இருக்கைகள மட்டுமே நிரப்பப்படும்.

 இதனால் ஏற்படும்  வருவாய் இழப்பை ஈடுகட்ட, கூடுதல் காட்சிகள் திரையிடப்படும்.

– ஏழுமலை வெங்கடேசன்