தமிழ்த் திரையுலகின் முன்னணி நாயகியாக வலம் வருபவர் ப்ரியா பவானி சங்கர். மான்ஸ்டர் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுடன் நடித்ததால் இவர்கள் இருவருக்கும் காதல் என வதந்தி பரவியது .
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தனது காதலர் ராஜின் பிறந்த நாளுக்கு ப்ரியா பவானி சங்கர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிலையில் ஒரு வாரத்துக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டார் ப்ரியா பவானி சங்கர். அந்தப் பதிவினால் காதல் தோல்வி வதந்தியில் சிக்கினார்.
https://www.instagram.com/p/CASc4_Eji14/
இந்தச் செய்திகள் அனைத்துமே முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மறைமுகமாக தனது இன்ஸ்டாகிராம் பதிவில் ப்ரியா பவானி சங்கர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் தொலைபேசியைப் பார்த்துச் சிரிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, “நம்மைப் பற்றிய வதந்திகளை நாமே படிக்கும்போது” என்று தெரிவித்துள்ளார்.