த்ரிஷ்யம் புகழ் ஜித்து ஜோசப் இயக்கத்தில் ஒரு மெகா மலையாள படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் த்ரிஷா, சில நாட்கள் அதன் படப்பிடிப்பிலும் பங்கேற்றுள்ளார். ‘RAM’ என்று பெயரிடப்பட்ட இப்படத்தில் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்தியாவில் படப்பிடிப்பை முடித்த பின்னர் லண்டனுக்கு செல்ல திட்டமிட்டிருந்தனர். ஆனால் கொரோனா பரவலால் உலகமெங்கும் ஊரடங்கு இருப்பதால் வெளிநாடு செல்லும் திட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த ஊரடங்கு எப்போது முடியும், திரையுலக வாழ்க்கை இயல்புக்கு திரும்ப எத்தனை நாட்கள் எடுக்கும் என்பதெல்லாம் கேள்வி குறியாகவே இருப்பதால் இப்படத்தை கை விடுவதாக ஜித்து ஜோசப் கூறியுள்ளார் .