தராபாத்

தெலுங்கானா மாநிலத்தில் ஊரடங்கு மே மாதம் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் பல விதிகள் தளர்வு அமலுக்கு வருகிறது.

தெலுங்கானா மாநிலத்தில் கொரோனாவால் இதுவரை 1592 பேர் பாதிப்பு அடைந்து 34 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 1002 பேர் குணம் அடைந்துள்ளனர்.  நேற்று 41 பேருக்குத் தொற்று உறுதி ஆகி உள்ளது.  தற்போது 556 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தெலுங்கானா முதல்வர் ஊரடங்கை மே மாதம் 31 வரை நீட்டித்துள்ளார். இன்று முதல் விதிகளில் சில தளர்வுகளை முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார்.

அதன்படி தெலுங்கானா மாநில சாலை  போக்குவரத்துக் கழகம் மாநிலம் முழுவதும் இன்று முதல் பேருந்துகளை இயக்குகிறது.  ஐதராபாத் நகர நகர பேருந்துகளும் வெளி மாநிலங்களுக்கான பேருந்துகளும் இயங்காது.  ஐதராபாத் நகரில் மெட்ரோ ரயில் இயங்காது.

ஐதராபாத் உள்ளிட்ட மாநிலத்தின் அனைத்து இடங்களிலும் ஆட்டோ மற்றும் டாக்சிகள் இன்று முதல் இயங்கும்.   ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர இருவரும் டாக்சிகளில் ஓட்டுநர் தவிர மூவரும் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் தடை செய்யப்பட்ட பகுதிகள் தவிர மற்ற பகுதிகள் பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன.   அனைத்து கடைகளையும் சிறிது சிறிதாகத் திறக்க முதல்வர் அனுமதி அளித்துள்ளார்  அத்துடன் முடிதிருத்தக கடைகள்  இ காமர்ஸ் மையங்களையும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் சமூக இடைவெளியுடன் 100% ஊழியர்கள் பனி புரிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  அத்துடன் அனைத்து தொழிலகங்கள், தொழிற்சாலைகள், உற்பத்தி மையங்களையும் மீண்டும் திறக்க முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார்.

இரவு நேர ஊரடங்கு மே மாதம் 31 வரை தொடர உள்ளது. வழிபாடு தலங்கள், கல்வி நிலையங்கள், விழாக்கூடங்கள், வணிக வளாகங்கள், திரை அரங்குகள் மூடப்பட்டிருக்கும்.  அதைப்போல் பார்கள், கிள்புகள், விளையாட்டு திடல்கள், ஜிம்கல், நீச்சல் குளங்கள், பூங்காக்கள், தீம் பார்க்குகளுக்கும் திறக்க அனுமதி கிடையாது.

மாநிலத்தில் எல்லா பகுதிகளிலும் முகக்கவசம் அணிவது கட்டாயம் ஆகும்.  முகக்கவசம் அணியாமல் வெளியே நடமாடினால் ரூ.1000 அபராதம் என முதல்வர் அறிவ்த்ஹ்டுள்ளர்  அத்துடன் சமூக இடைவெளி விதிகளை மீறக்கூடாது எனவும் அவ்வாறு மீறித் தொற்று அதிகரித்தால் மீண்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் எனவும் முதல்வர் எச்சரித்துள்ளார்.