ஐதராபாத்:
தெலுங்கானாவில் நேற்று புதிதாக 41 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1,592 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 556 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 1,002 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு அம்மாநிலத்தில் இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், தெலுங்கானா முதலமைச்சர் சந்திர சேகர ராவ் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
‘வழிபாட்டுத்தளங்கள், சினிமா தியேட்டர்கள் உள்ளிட்ட சில பகுதிகள் தொடர்ந்து மூடியே இருக்கும். ஆட்டோ, டாக்சி சேவைகள் ஐதராபாத்தில் செயல்படலாம். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர எஞ்சிய பகுதிகளில் உள்ள சலூன் கடைகளை திறக்கலாம்.
ஆனால், வீடுகளை விட்டு வெளியே வரும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். முகக்கவசம் அணியாமல் பொது இடத்தில் யாரேனும் சுற்றித்திரிந்தால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். தேவை இல்லாமல் மக்கள் சாலைகளில் சுற்றித்திரிந்தார் மாநிலம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்
இவ்வாறு தெரிவித்துளளார்.