டெல்லி: லாக்டவுன் காலத்தில் 12 லட்சம் இபிஎப்ஒ உறுப்பினர்கள் ரூ .3,360 கோடி ஓய்வூதிய சேமிப்பை திரும்பப் பெற்றுள்ளனர்.
கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் 3 கட்ட ஊரடங்கு முடிந்து, இன்றுமுதல் 4ம் கட்ட ஊரடங்கு தொடங்கி இருக்கிறது. இந்த ஊரடங்கு வரும் 31ம் தேதி வரை அமலில் இருக்கும்.
கொரோனா பாதிப்பு காரணமாக சரிவில் இருக்கும் பொருளாதாரத்தை மேம்படுத்த ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். அதனை தொடர்ந்து, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த சில நாட்களாக பல கட்ட புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
நேற்றும் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பல சலுகைகளை அறிவித்தார். அப்போது பேசிய அவர், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள ஈபிஎப்ஓ பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா தொகுப்பின் கீழ் மொத்தம் 12 லட்சம் பேருக்கு பணம் திருப்பி அளிக்கப்பட்டது என்றார். மொத்தம் ரூ .3,360 கோடி ஓய்வூதிய சேமிப்பை திரும்பப் பெற்றுள்ளனர் என்றும் கூறினார்.
முன்னதாக, லாக்டவுனால் ஏற்பட்ட கஷ்டங்களைச் சமாளிக்க முறையான துறைத் தொழிலாளர்கள் தங்கள் ஓய்வூதிய சேமிப்பிலிருந்து முன்கூட்டியே திரும்பப் பெற அனுமதி தரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.