சென்னை:
மிழகத்தில் இன்றைய (18/05/2020) காலை 9 மணி நிலவரப்படி,  ஊரடங்கை மீறிய வாகனங்கள் எண்ணிக்கையும்  4லட்சத்தையும், அபராதம் வசூல் ரூ.6 கோடியையும் தாண்டி உள்ளதாக தமிழக காவல்துறை அறிவித்து உள்ளது.

தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் 24ந்தேதி முதல்  மே 31ந்தேதி வரை 4 கட்டங்களாக ஊரடங்கு  நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையில்,  ஊரடங்கை மீறி பலர் எந்தவித அனுமதியும் இன்று வெளியே வாகனங்களில் சுற்றி வருகின்றனர். அவர்களை காவல்துறையினர் மடக்கி வாகனங்களை பறிமுதல் செய்தும், வழக்கு பதிவு செய்தும், அபராதம் விதித்தும் வருகின்றனர்.
அதன்படி 18-5-2019 காலை 9 மணி நிலவரப்படி,  தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 4,00,866 வாகனங்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 4,88,250 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
4,60,513 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் ரூ.6,05,39,454 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளது.