சென்னை
இன்று முதல் 50% அரசு ஊழியர்கள் பணிக்கு வர வேண்டும் என்னும் அரசு உத்தரவை தொடர்ந்து அவர்கள் பயணம் செய்ய பேருந்துகள் தயார் செய்யப்பட்டுள்ளன.
நேற்றுடன் ஊரடங்கின் மூன்றாம் கட்டம் முடிந்துள்ள நிலையில் வரும் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கபட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் பல விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றாக அரசு அலுவலகங்களும் 50% ஊழியர்கள் பணிக்க் அர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இவர்கள் சுழற்சி முறையில் அவசியம் பணிக்கு வந்தாக வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இவர்கள் பணிக்கு வர வசதியாக அனைத்து கோட்டங்களிலும் தேவையான பேருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுளன. இந்த பேருந்து வசதிகளை அரசு ஊழியர்கள் உரிய கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ள்து.
அரசின் உத்தரவுப்படி ஒரு பேருந்தில் 20 பேர்கள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்பட உள்ளது. பேருந்துகளின் ஒவ்வொரு இருக்கையிலும் சமூக இடைவெளி விதியின்படி ஒருவர் மட்டுமே அமரும் வகையில் எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அரசுத் துறைகள் அளிக்கும் தகவலின்படி பேருந்துகளின் எண்ணிக்கை குறித்து போக்குவரத்து அதிகாரிகள்ல் முடிவு செய்ய உள்ளனர்.
இதைப் போல் தனியார் நிறுவனங்கள், தொழிலகங்கள் போன்றவையும் இந்த வசதியை ஒப்பந்த அடிப்படையில் பயன்படுத்த முடியும். அரசு விதிகளின் படி அதற்கான கட்டணங்கள் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.