டெல்லி: புதுச்சேரி உள்ளிட்ட 6 யூனியன் பிரதேசங்களில் உள்ள மின் விநியோக நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து இருக்கிறார்.
தன்னிறைவு இந்தியா என்ற தொலைநோக்கு திட்டத்தின் கீழ், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 3 நாட்களாக திட்டங்கள் தொடர்பான அம்சங்களை விளக்கி வருகிறார். இந்நிலையில் 4ம் நாளான இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:  புதுச்சேரி உள்பட நாடு முழுவதும் உள்ள  6 யூனியன் பிரதேசங்களில் உள்ள மின் விநியோக நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும்.
மருத்துவமனைகள் அமைப்பதற்கான மானியம் 30% வரை அதிகரிக்கப்படுகிறது. விண்வெளியில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும். மருத்துவத்துறையில் பயன்படுத்தப்படும் கதிரியக்க தனிமங்களான  தயாரிப்பில் இனி தனியார் பங்களிப்புக்கு அனுமதி அளிக்கப்படும்.
புற்றுநோய் உள்ளிட்ட நோய்களை குணப்படுத்த கதிரியக்க தனிமங்கள் முக்கிய பங்காற்றுகின்றன.  அதேபோல் உணவு பதப்படுத்தும் துறையில் கதிரியக்க ஐசோடோப்புகள் உருவாக்க தனியார் பங்களிப்புக்கு அனுமதி அளிக்கப்படும் என்றார்.