வேலூர்:
மிழகத்தில் 85 சதவீத கட்டுமான தொழிலாளர்களுக்கு, கொரோனா ஊரடங்கு காரணமாக வழங்கப்பட்ட  நிவாரணத் தொகை வங்கியில் செலுத்தப்பட்டுள்ளது என்று தமிழக அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்து உள்ளார்.

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட கட்டுமானப்தொழிலாளர்கள், அமைப்பு சாராத் தொழிலாளர் களுக்கு தமிழகஅரசு ரூ.1000 நிவாரண உதவித் தொகை அறிவித்தது. அதன்படி,   தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள 12 லட்சத்து 97 ஆயிரத்து 382 அமைப்புசாரா கட்டுமான தொழிலாளர் களின் வங்கி கணக்கில் நிவாரண தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று வாணியம்பாடியில் அமைந்துள்ள தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்த தமிக  தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது,  தமிழகத்தில் தொழிலாளர் நல வாரியத்தில் 25 லட்சத்து 98 ஆயிரத்து 659 பேர் பதிவு செய்துள்ளனர். இதில் 12 லட்சத்து 97 ஆயிரத்து 382 கட்டுமான தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளார்கள்.
இவர்களுக்கு தமிழக அரசு அறிவித்த முதல் தவணை நிவாரண தொகையான ஆயிரம் ரூபாய்  85 சதவீதம் உறுப்பினர்களுக்கு வழங்கபட்டு விட்டது.
மேலும் இரண்டாவது முறையும் வழங்க தமிழக அரசு உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் பதிவு செய்துள்ள 25 லட்சத்து 98 ஆயிரத்து 659 உறுப்பினர்களுக்கு வழங்க தொழிலாளர் நல வாரியத்திற்கு 519 கோடியே 73 லட்சத்து 18 ஆயிரம் ரூபாயை தமிழக அரசு வழங்கியது.
அதில் 85 சதவீதம் உறுப்பினர்களுக்கு வங்கி கணக்கில் வழங்கப்பட்டுள்ளது.
வங்கி கணக்கு இல்லாத மீதம் உள்ள 15 சதவீதம் பேருக்கு அஞ்சல் வழி மணியார்டர் மூலம் பணம் அனுப்ப தொழிலாளர் நல வாரிய செயலளர் நசிமுதீன் ஆலோசனை செய்து வருகிறார். இன்னும் 15 நாட்களில் பதிவு செய்து புதுப்பித்து வைத்துள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் நிவாரண நிதி உதவி சென்றடையும்.
தமிழகத்தில் சுமார்  1 கோடி கட்டுமான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இன்றி தவிப்பு என்ற செய்தி முற்றிலும் தவறு.
பதிவு செயப்படாத தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் 8 லட்சத்து 48 ஆயிரம் தொழிலாளர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் நிவாரணம் வழங்க தமிழக முதலமைச்சர் அறிப்பின்படி 100 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.