சென்னை:
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிக்குள் கொரோனா நோய் தொற்று இன்றைய (16/05/2020)  நிலவரம் குறித்து மண்டலவாரி பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
இதில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில்  1,047 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழக சுகாபதாரத்துறை நேற்று வெளியிட்ட தகவலின்படி, தமிழக்ததில் கொரோனா பாதித்த வர்களின் எண்ணிக்கை 10,108 ஆக அதிகரித்துள்ளது.  அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 309 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் தற்போது சென்னையில் மண்டலவாரியாக பாதிக்கப்பட்டோர் குறித்து அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதில், முதலிடத்தில் ராயபுரம் உள்ளது. அங்கு  1,047 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 2வது இடமான திரு.வி.க.நகரில் 737 பேருக்கும், 3வது இடமான கோடம்பாக்கத்தில் 919 பேருக்கும்,  4வது இடமான தேனாம்பேட்டையில் 640 பேரும்,   5வது இடத்தில் அண்ணாநகரில் 493 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து, வளசரவாக்கத்தில் 483 பேருக்கும், தண்டையார்பேட்டையில்   474 பேர், அடையாறில் 316 பேருக்கும், அம்பத்தூரில் 285 பேருக்கும்,திருவொற்றியூரில் 133 பேரும், மாதவரத்தில் 92 பேருக்கும், மணலியில் 79 பேருக்கும் , பெருங்குடியில் 77 பேருக்கும், சோழிங்க நல்லூரில் 74 பேருக்கும்,ஆலந்தூரில் 71 பேருக்கும்  தொற்று உறுதியாகியுள்ளது.