டெல்லி: கொரோனா வைரஸ் தொற்று ஒரு பக்கம் இருக்க யார் முதலில் டிரில்லியனர் என்பது குறித்த ஆய்வு முடிவு வெளியாகி உள்ளது.
உலகம் முழுவதும் தற்போது பொருளாதார முற்றிலும் முடங்கி இருக்கிறது. இந்த நிலையில் ஒரு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. யார் எப்போது டிரில்லியனர் ஆவார்கள் என்பது பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அமேசான் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான ஜெஃப் பெசோஸ் 2026 ஆம் ஆண்டின் உலகின் முதல் டிரில்லியனர் ஆக கூடும் என்றும் அப்போது அவருக்கு 65 வயது இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அவர் சமீபத்தில் விவாகரத்து ஆன போது முன்னாள் மனைவிக்கு 38 பில்லியன் டாலர்கள் வழங்கினார்.
ஆனாலும் உலக பணக்காரர் பட்டியலில் இருந்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் அவரது சொத்து மதிப்பு 34 சதவீதம் அதிகரித்துள்ளது. பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் விட்ட இடத்தை பிடிக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தற்போது வளர்ச்சியுடன் ஒப்பிடும் போது அவரின் 51 வயதில் தான் பில்லியன் டாலர் மதிப்பினை அடைவார் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முதல் பணக்காரரான முகேஷ் அம்பானி 2033 ஆம் ஆண்டில்… அதாவது அவரது 75 ஆவது வயதில் போதே ட்ரில்லியனர் ஆவார் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
சீனாவின் மிகப்பெரிய நிறுவனமான அலிபாபாவின் ஜாக் மா 2030ம் ஆண்டில் 65 ஆவது வயதில் ஆவார் என்றும் கூறப்பட்டுள்ளது.