
துபாய்: கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில், துபாயின் புகழ்பெற்ற கோல்ட் சூக் பகுதியில் 500க்கும் மேற்பட்ட கடைகள் திறக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் பல பகுதிகளிலும் கொரோனா வைரஸ் சற்று கூடுதலாக பரவி வருகிறது. இதனைத் தடுப்பதற்கு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் முடக்கப்பட்டது. துபாயில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து கொண்டிருந்தாலும், அதற்கு மத்தியில் கோல்ட் சூக் பகுதியில் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன.
வாடிக்கையாளர்கள் மீண்டும் வருகைத்தர துவங்கினர். பார்வையாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு இடையே துபாயில் கோல்ட் சூக் பகுதியில் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
துபாய் மீடியா அலுவலகம் சார்பாக டுவிட்டரில் இடப்பட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது; துபாயில் கோல்ட் சூக்கில் 500க்கும் மேற்பட்ட கடைகள் , கொரோனா ஊரடங்குகளை தொடர்ந்து மீண்டும் திறக்கப்படுகின்றன. மேலும், அனைவரின் பாதுகாப்பையும் நல்வாழ்வையும் உறுதிசெய்வதற்கான கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு மத்தியில் கடைகள் திறக்கப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.