சென்னை:
அரசின் உத்தரவை மதிக்காமல் வியாபாரம் செய்த சாலையோர வியாபாரிகளின் பழங்களையும், வண்டிகளையும் சாய்த்து, சாலையில வீசிய நகராட்சி ஆணையர் சுசில் தாமஸ்பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஊரடங்கு தளர்த்தப்பட்டு வாணியம்பாடியில் பெரும்பாலான கடைகள் செயல்பட்டு வரும் நிலையில் வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் ஆய்வுக்கு சென்றபோது, சாலையோரங்களில் விதியை கடைபிடிக்காமல் பழக்கடைகள் வைத்திருப்பதை கண்டதும், அவற்றை தள்ளிப்போட்டும், பழங்களை ரோட்டில் வீசியும் அடாவடி செய்தார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இந்த நிலையில்,சிசில் தாமஸ் வாணியம்பாடி நகராட்சி ஆணையர் பதவியில் இருந்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு புதிய பணி ஏதும் ஒதுக்கப்படாத நிலையில், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
Patrikai.com official YouTube Channel