சென்னை:
மிழகத்தில் தொழிற்சாலைகள் 50% பணியாளர்களை கொண்டு இயங்கலாம்  என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கொரோனா அதிகரிக்க கோயம்பேடு வியாபாரிகள்தான் காரணம் என்று நேரடியாக குற்றம் சாட்டினார்.
அரசின் அறிவுறுத்தலை கடைபிடித்தால் கொரோனா தொற்று பரவலை தடுக்கலாம், பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனா பரவலை தடுப்பது சுலபமல்ல என்ற கூறியவர், 

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக பணியாற்றிய துணைமுதல்வர், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எனது பாராட்டுகள் என்றார்.
சென்னையிலிருந்து சொந்த ஊர் சென்றவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப் படும் என்று கூறியவர், வெளிமாநிலத்தில் உள்ள தமிழர்களை மீட்பதற்கு படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
மேலும், தமிழகத்தில்  கட்டுப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை தவிர பிற இடங்களில் உள்ள தொழிற்சாலைகள் 50% பணியாளர்களை கொண்டு இயங்கலாம் என்று கூறியவர்,  பணிக்கு செல்லும் ஒவ்வொருவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.