சென்னை :
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட கலெக்டர்கள் மாநாடு, கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து அனைவரும் விரைவில் குணமடைவார்கள் என்று தனது துவக்க உரையில் கூறினார்.
அதிக எண்ணிக்கையிலான பரிசோதனை மையங்கள் உள்ள மாநிலமாகவும், அதிக எண்ணிக்கையிலான பரிசோதனை நடத்தப்படும் மாநிலத்தில் ஒன்றாகவும் தமிழகம் இருப்பதாலேயே, இங்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்று தெரிவித்த அவர்,
கொரோனா வைரஸ் நோய் தொற்று உலகெங்கிலும், ஒரு வேகத்திற்குப் பிறகு குறைந்து வருகிறது; தமிழ்நாட்டிலும் அதுபோல் நடந்துவருகிறது. நோய் தொற்று கண்டறியப்பட்ட அனைவரும் விரைவில் குணமடைவார்கள்.
தமிழ்நாட்டில் குணமடைவோர் 27% சதவீதமாகவும், இறப்பு விகிதம் 0.67% உள்ளதே இதற்கு சான்று என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.
வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெறும் மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் முதல்வர் இ.பி.எஸ் தனது அறிமுகக் குறிப்பில் இவ்வாறு கூறியிருக்கிறார்.
அதே வேளையில், நேற்று முன்தினம் நடந்த பிரதமர் தலைமையிலான மாநில முதல்வர்கள் ஆலோசனை கூட்டத்தில், வரும் மே 31 வரை தமிழகத்திற்கு ரயில் மற்றும் விமான போக்குவரத்தை முடக்கிவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது நினைவுகூறத்தக்கது.