சென்னை:
கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் சிக்சி உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல வேண்டுமென்றால் 9176123458 எண்ணை தொடர்பு கொண்டு உதவி கோரலாம் என்று தமிழக காங்கிரஸ் கட்சி அறிவித்து உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஊரடங்கு உத்தரவினால் பாதிக்கப்பட்டு தமிழகத்தில் இருந்து தங்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்பி செல்ல விரும்பும் வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் இதர பிரிவினருக்கு உதவும் பொருட்டு காங்கிரஸ் கட்சியின் மாநில ஹெல்ப் லைன் மையம் சென்னை, சத்தியமூர்த்தி பவனில் செயல்படும். உதவிக்கு 9176123458 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.