’’ கோடிகளில் ரொக்கம்.. லட்சங்களில் நகைகள்..ஆனால் சொந்தமாக கார் இல்லை’’ என்று கணக்கு காட்டியுள்ளார், மகாராஷ்டிர முதல்-அமைச்சர் உத்தவ் தாக்கரே.
அந்த மாநில சட்ட மேல்சபை ( எம்.எல்.சி.) தேர்தலில் போட்டியிட அவர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

தேர்தல் விதிமுறைகளின் படி, தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் உள்ள சொத்து விவரங்களை உத்தவ் , தனது மனுவுடன் தெரிவித்துள்ளார்.
‘’தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் மொத்தம் 143 கோடியே 26 லட்சம் ரூபாய்க்கு சொத்துக்கள் உள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.
தங்க- வைர நகைகள் என அவரிடம் 53 லட்சம் ரூபாய்க்கு நகைகள் உள்ளன.
அவர் மனைவி ராஷ்மி தாக்கரேயிடம் உள்ள நகைகளின் மதிப்பு, ஒரு கோடியே 35 லட்சம் ரூபாய்.
பங்கு பத்திரம், மியூச்சுவல் பண்ட் என பல விதங்களில் காசு வைத்துள்ள உத்தவ் , தனக்கு சொந்தமாக எந்த வாகனமும் கிடையாது என்று தேர்தல் ஆணையத்தில் சமர்பித்துள்ள ’அபிடவிட்’டில் கூறி உள்ளார்.