சென்னை:
தமிழகத்தில் மே16ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. மேலும், தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறி உள்ளது.
கடந்த 4ந்தேதி முதல் தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கி மண்டையை பிளக்கும் வெயில் கொளுத்தி வருகிறது. இநத் வெயிலின் தாக்கம் மே 28-ஆம் தேதி வரை நீடிக்கும்.
இதற்கிடையில் வெப்பச்சலனம் காரணமாக தென்மாவட்டங்களின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் சென்னை வானிலைமையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் மே16ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்து வரும் 48மணி நேரத்திற்கு நாகை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி,கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைபெய்ய வாய்ப்பு உள்ளது.
குமரிக்கடல், லட்சத்தீவு மற்றும் மாலத்தீவை ஒட்டியுள்ள பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வரை வீசக்கூடும் என்பதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு இப்பகுதிகளில் மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம்.
இவ்வாறு தெரிவித்து உள்ளது.
அக்னி வெயில் கொளுத்தி வரும் வேளையில், வானிலை மை ஆய்வு மையம் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என தெரிவித்துள்ளது விந்தையை ஏற்படுத்தி உள்ளது.