சென்னை:
தமிழகத்தில் ஒரு நபர் மற்றும் இரண்டு நபர் குடும்ப அட்டைதாரர்களுக்கான அரிசி அளவை தமிழகஅரசு குறைத்து அறிவித்து உள்ளது. கொரோனா ஊரடங்கால் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி உள்ள நிலையில், அரிசியின் அளவை குறைத்துள்ளது மக்களியே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் மக்கள் வாழ்வாதாரத்திற்கு ஏற்க 4 வகையான ரேசன் அட்டைகள் வழங்கப்பட்டு வந்தன. அதன்படி, பச்சைநிற அட்டை, வெள்ளை நிற அட்டை, காக்கி அட்டைநீல நிற அட்டை என வகைப்படுத்தப்பட்டது. தற்போது அனைத்தும் ஸ்மார்ட் கார்டுகளாக மாற்றப்பட்டு உள்ளது.
இந்த வண்ண அட்டைகளுக்கு ஏற்ப ரேசன் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி உள்பட ரேசன் பொருட்கள் வழங்கப்படுவது மாற்றம் ஏற்படும். அதுபோல குடும்ப உறுப்பினர்களுக்கு தகுந்தவாறும் அரிசி, சர்க்கரை போன்றவை வழங்கப்படுவதும் மாறும்.
இந்த நிலையில், தற்போது குடும்ப உறுப்பினர் படி வழங்கப்படும் அரிசியின் அளவை மாநில அரசு குறைத்து உத்தரவிட்டு உள்ளது.
அதன்படி ஒருநபர் அட்டைக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த அரிசி 12 கிலோவிலிருந்து 7கிலோவாக குறைக்கப்பட்டு உள்ளது.
அதுபோல, இரண்டு நபர் அட்டைக்கு வழங்கப்பட்டு வந்த 16 கிலோ அரிசியை, 12 கிலோவாக குறைத்துள்ளது.
தமிழகஅரசின் இந்த திடீர் அறிவிப்பு பாமர மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.