சென்னை:

சென்னையிலிருந்து கிளம்பிய சிறப்பு ரயிலில் மூலம் 1038 வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு பயணமானார்கள்.

சென்னை எம்ஜிஆர் ரயில் நிலையத்தில் இருந்து நேற்றிரவு 9.55-க்கு 1038 வெளிமாநில தொழிலாளர்களுடன் சிறப்பு ரயில் கிளம்பியது. ஒடிசா செலும் இந்த ரயில் பயணிக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனிங் செய்யப்பட்டதாகவும், அவர்கள் சமூக இடைவெளியுடன் அமரவைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், புலம்பெயர்ந்துள்ள வெளிமாநில தொழிலாளர்களுக்காக இன்று சென்னையிலிருந்து மணிப்பூருக்கு ஷராமிக் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் இன்று காலை 10 மணிக்குப் புலம்பெயர்ந்த வெளிமாநில தொழிலாளர்களை அழைத்துக்கொண்டு மணிப்பூர் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே நேற்று கோவையிலிருந்து 1140 புலம்பெயர் தொழிலாளர்களுடன் உத்தரப் பிரதேசம் மாநிலம் அக்பர்பூருக்கு ஷராமிக் சிறப்பு ரயில் புறப்பட்டுச் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.