காட்பாடி

தென்னக ரயில்வே தமிழகத்தில் இருந்து இன்று இரவு தனது முதல் வெளி மாநில தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயிலை இயக்க உள்ளது.

ஊரடங்கு காரணமாகப் பல வெளி மாநில தொழிலாளர்கள் தங்கள் ஊருக்குச் செல்ல முடியாத நிலையில் உள்ளனர்.  இவ்வாறு தமிழகத்திலும் பல மாநில தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர்.

மத்திய அரசு இவர்களை அந்தந்த மாநில அரசின் ஒப்புதலுடன் திருப்பி அனுப்ப அனுமதி அளித்துள்ளது. அதையொட்டி இந்த தொழிலாலரக்ளுக்கான சிறப்பு இடை நில்லா ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அவ்வகையில் தென்னக ரயில்வே தமிழகத்தில் இருந்து முதல் ரயிலை இன்று இயக்குகிறது

காட்பாடியில் இருந்து ராஞ்சி செல்லும் இந்த ரயிலில் 1000 பேர் பயணம் செய்ய உள்ளனர்.  இவர்களில் பெரும்பாலோர் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்குச் சிகிச்சை பெற வந்து ஊரடங்கால் இங்கே சிக்கியவர்கள் ஆவார்கள்.