சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு 2 ஆயிரத்தை கடந்துள்ளது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையிலிருந்து தனது சொந்த ஊரான தேனிக்கு பயணப்பட்டார் இயக்குநர் பாரதிராஜா. தேனி மாவட்ட எல்லையில் சுகாதாரத்துறையினரால் சோதிக்கப்பட்டு தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது.
இருப்பினும் சிவப்பு மண்டலப்பகுதியில் இருந்து அவர் வந்ததால் வீட்டில் 14 நாட்கள் தனிமையில் இருக்கும்படி தேனி நகராட்சி அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். இதன்படி அவரது வீட்டில் இதற்கான தகவல் ஒட்டப்பட்டது.


இந்தத் தகவல் வெளியானதிலிருந்து ஊடகங்களிலும், சமூக வலைதளத்திலும் பெரும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. தற்போது இது தொடர்பாக உண்மை நிலவரம் என்ன என்பதை பாரதிராஜா வீடியோ பதிவின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.