சென்னை:
ஐஸ்அவுஸைத் தொடர்ந்து சென்னை பாரிமுனை பகுதியில் உள்ள சவுகார்பேட்டை அம்மா உணவகத்தில் பணியாற்றிய மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக சென்னையில் தீவிரமாக பரவி வருகிறது. தப்லிகி மாநாட்டில் கலந்துகொண்டவர்களைத் தொடர்ந்து, கோயம்பேடு சந்தை மூலம் நூற்றுக்கணக்கானோருக்கு கொரோனா தொற்று பரவி இருப்பது தெரிய வந்துள்ளது. சென்னையில் இதுவரை 2008 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது.
இந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக இலவச உணவு வழங்கப்பட்டு வரும் அம்மா உணவகத்தில் பணியாற்றிவரும் சிலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. ஏற்கனவே சென்னை ஐஸ்அவுஸ் அம்மா உணவகத்தில் சமையல்வேலை செய்து வரும் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, அந்த உணவுகம் மூடப்பட்டது.
இந்த நிலையில், சவுகார்பேட்டை அண்ணா பிள்ளை தெருவில் உள்ள அம்மா உணவகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் 2 பேருக் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த அம்மா உணவகமும் மூப்பட்டது.
இதனால் அம்மா உணவகத்தில் சாப்பிட்ட மக்களுக்கு கொரோனா பரவியிருக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.