திருவனந்தபுரம்:
மலையாள படவுலகைச் சேர்ந்த இளம் நடிகர் பசில் ஜார்ஜ் கார் விபத்தில் அகால மரணம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஆண்டு வெளிவந்த வெளிவந்த பூவல்லியும் குஞ்சனும் என்ற படத்தில் அறிமுகமானவர் பசில் ஜார்ஜ். தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் முடங்கி உள்ள நிலையில், பசில் ஜார்ஜ் தனது நண்பர்களுடன் நேற்று இரவு காரில் கோலஞ்சேரி பகுதியில் இருந்து சென்றுகொண்டி ருந்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை யோத்தில் உள்ள மின் கம்பத்தில் மோதி திரும்பி, அருகில்உள்ள கட்டித்தின் மீதும் பாய்ந்துள்ளது.
இந்த கோரவிபத்தில், காரில் இருந்த 5 பேர் மற்றும் கார் மோதிய கட்டிடத்தில் வேலை செய்து கொண்டிருந்த 3 பேர் பலத்த காயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்ட்டனர்.
செல்லும் வழியிலேயே பசில் ஜார்ஜ் மற்றும் அவரது நண்பர்கள் இருவர் பரிதாபமா க உயிரிழந்தனர்.
விபத்துக்கு காரணம், கார் அதிவேகமாக ஓட்டிச் சென்றதே என கூறப்படுகிறது.