பெங்களூரு

ட்டுமான நிறுவன அதிபர்களை கர்நாடக முதல்வர் சந்தித்த சில மணி நேரங்களில் வெளி மாநில தொழிலாளர்களுக்கான அனைத்து ரயிலையும் அரசு ரத்து செய்துள்ளது

ஊரடங்கு காரணமாக வெளி மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல இயலாத நிலை ஏற்பட்டது.  இதனால் பல வெளி மாநில தொழிலாளர்கள் தாங்கள் வேலை செய்யும் மாநிலங்களை விட்டு வெளியேற முடியாததால் பலரும் உணவின்றி தவித்து வந்தனர்.   தற்போதைய மூன்றாம் கட்ட ஊரடங்கின் போது அந்தந்த மாநில அரசுகளின் ஒப்புதலோடு வெளி மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பலாம் என மத்திய அரசு தெரிவித்தது.

அதையொட்டி பல இடைநில்லா ரயில்கள் மாநிலங்களுக்கிடையே இயக்கப்பட்டன.  இந்த ரயில்களில் பயணக் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக ஒரு சர்ச்சை எழுந்தது.  அதையொட்டி மாநில அரசுகளுக்குக் காங்கிரஸ் கட்சி நிதி அளித்து வெளி மாநில தொழிலாளர்களிடம் பயணக் கட்டணம் வசூலிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டது.  இன்னும் பல வெளி மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல சிறப்பு ரயிலுக்காகக் காத்திருக்கின்றனர்

இந்நிலையில் நேற்று கர்நாடக மாநிலத்தில் உள்ள பெரிய கட்டுமான நிறுவன அதிபர்கள் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை நேற்று சந்தித்துள்ளனர்.   அந்த சந்திப்பு முடிந்த சில மணி நேரங்களுக்குள் கர்நாடக அரசு வெளி மாநில தொழிலாளர்களை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்துள்ள சிறப்பு ரயில்களை ரத்துசெய்துள்ளது.   இந்திய ரயில்வே துறைக்கு மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து அதிகாரி நஞ்சுண்ட பிரசாத் இதைத் தெரிவித்துள்ளார்.

அரசு இந்திய ரயில்வேத் துறைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இன்று அதாவது ஆறாம் தேதி முதல் வெளி மாநில தொழிலாளர்களுக்காக ஏற்பாடு செய்துள்ள அனைத்து ரயில்களும் இனி தேவைப்படாது என்பதால் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளது.   இதனால் நேற்று பெங்களூருவில் இருந்து உத்தரப்பிரதேசம் மற்றும் ஜார்கண்ட் மாநிலம் சென்ற இரு ரயில்களே கடைசி ரயில்கள் ஆகும்.

இதுகுறித்து பெயர் தெரிவிக்க விரும்பாத மூத்த அதிகரி ஒருவர், “ரயில்கள் ரத்து குறித்துச் சரியான காரணம் தெரிவிக்காத போதிலும் கட்டுமான நிறுவன அதிபர்கள் முதல்வரைச் சந்தித்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.    தற்போது மாநிலத்தின் கடும் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளதால் அதைச் சீர் செய்ய வெளிமாநில தொழிலாளர்கள் தேவை உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

 
Thanx : THE QUINT