சென்னை:
மிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில்,  கொரோனா பாதிப்பு உள்ள பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக (கட்டுப்பாட்டு மண்டலங்கள்) அறிவிக்கப்பட்டு, அங்குள் மக்கள் வெளியேறாதவாறு பாதுகாக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில்,  சென்னையில் 189 பகுதிகள்  உள்பட தமிழகத்தில் மொத்தம் 711 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இருப்பதாக தமிழகஅரசு அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் மொத்தமாக 711 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை மாவட்ட வாரியாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று மட்டும் 527 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,550ஆக அதிகரித்து உள்ளது. மேலும் நேற்று ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால், பலி எண்ணிக்கை 31 ஆகவும்,  குணமடைந்தோர் எண்ணிக்கை 1409  ஆக அதிகரித்து உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தற்போது உள்ள சூழலில் குறிப்பாக தலைநகர் சென்னையில் கொரோனாவின் தாக்கம் அதிதீவிரமாக பரவி வருகிறது.  நேற்று மட்டுமே 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் இதுவரை சென்னையில் மட்டும் 1,724 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் மொத்தமாக 711 கட்டுப்பாட்டு மண்டலங்கள் உள்ளது. அதை மாவட்டம்  வாரியாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான அரசிதழிலும் வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதில், அதிகபட்சமாக சென்னையில் 189 இடங்களும், கடலூர் மாவட்டத்தில் 21 இடங்களும் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையின் கட்டுப்பாட்டு மண்டலங்கள் விவரம்…