கடந்த சில வருடங்களாகவே புற்று நோய்க்கு எதிராக சிகிச்சை எடுத்து வந்த ரிஷி கபூர் , ஏப்ரல் 30 காலை 8:45 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்।. அவருடன் சேர்ந்து பணியாற்றிய பிரபலங்கள் அவரை பற்றி ட்வீட் செய்வதுடன், வீடியோக்களும் வெளியிட்டு வருகிறார்கள்
கடந்த 1980ம் ஆண்டு ரிஷி கபூர் தன்னுடன் சேர்ந்து நடித்த நீத்து மீது காதல் கொண்டு அவரை திருமணம் செய்தார். அவர்களுக்கு ரித்திமா கபூர் என்கிற மகளும், ரன்பிர் கபூர் என்கிற மகனும் உள்ளனர்.
இந்நிலையில் முன்னதாக பேட்டி ஒன்றில் நீத்து கபூர் தன் கணவர் பற்றி கூறிய வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.
ரிஷி அமெரிக்காவில் தங்கி சிகிச்சை பெற்றபோது பாலிவுட் பிரபலங்கள் பலர் அவரை சந்தித்தனர்।.ஆனால் அவர் இறந்தபோது கொரோனா லாக்டவுனால் யாராலும் அவர் முகத்தை கடைசியாக ஒரு முறை பார்க்க முடியாமல் போனது. ரிஷி கபூரின் இறுதிச் சடங்கில் அவரது குடும்ப உறுப்பினர்கள், தொழில் அதிபர் அனில் அம்பானி, பிரபல நடிகர்கள் அபிஷேக் பச்சன், ஆலியா பட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், ரிஷி கபூரின் இல்லத்தில் நடைபெற்ற ஆத்ம சாந்தி பூஜையில் மனைவி நீத்து கபூர், மகன் ரன்பீர் கபூர் மற்றும் மகள் ரித்திமா உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
https://www.instagram.com/p/B_yskFngqkn/
ரிஷி கபூர் குடும்பத்திற்கு அம்பானி குடும்பம் நட்பு மட்டும் அல்லாமல் சுக துக்கங்களில் உரிமை எடுத்து கொள்ளும் அளவுக்கு உறவு உண்டு .
தன்னுடைய இந்த கஷ்ட காலத்தில் தனக்கு தோள் குடுத்த அம்பானி குடும்பத்தினருக்கு நீத்து கபூர் நன்றி தெரிவித்துள்ளார் .
ரிஷிகபூர் அம்பானிக்கு சொந்தமான மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது முதல் ரிஷியின் ஆத்ம ஷாந்தி பூஜை வரை நீத்து கபூருக்கு அம்பானி குடும்பம் துணை நின்றது குறிப்பிடத்தக்கது.