சென்னை:
மிழகத்தில் மின் கட்டணம் செலுத்த மே 22ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்படுவதாக  தமிழக அரசு அறிவித்து உள்ளது.
சென்னை உயர்நீதி மன்றத்தில் மின் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கக்கோரி  தொடரப்பட்ட வழக்கில், மின்கட்டணம் வசூலிக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.  மேலும் இதுகுறித்து மே 18-ஆம் தேதிக்குள் அரசு சார்பில் பதிலளிக்கவும், அதுவரை மின் கட்டணம் செலுத்தவில்லை என கூறி மின் துண்டிப்பு செய்யக்கூடாது என்று  உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  ஏற்கனவே அறிவிக்கப்பட்ட  மின் கட்டணம் செலுத்தும் தேதியான மே 6-ஆம் தேதியை மாற்றி மே22ந்தேதி வரை அவகாசம் நீட்டித்து உள்ளது.
இதுகுறித்து மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தாழ்வழுத்த மின்நுகர்வோர் மின் கட்டணம் செலுத்த மே 22 வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்வதாக தெரிவித்து உள்ளது.
மேலும், டந்த மார்ச் 23ம் தேதி முதல் மே 17ம் தேதி வரை மின்கட்டணம் செலுத்த கடைசி தேதி உள்ளவர்கள், மே 22ம் தேதி வரை எந்தவித அபாராதமின்றி கட்டணம் செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மார்ச் 23 முதல் மே 17 வரை மின் கட்டணம் செலுத்த கடைசி தேதி உள்ளவர்கள் மே 22 வரை அபாரதமின்றி கட்டணம் செலுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.