ரோம்: கொரோனா வைரஸால் கடுமையாகப் பீடிக்கப்பட்ட இத்தாலி, இயல்புநிலையை நோக்கி வேகமாக நகர்ந்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அந்நாட்டில் தற்போது வரை 2.11 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 28,884 பேர் பலியாகியுள்ளனர்.
கடந்த 2 வாரங்களாக புதிதாக கொரோனா பாதிப்புக்கு ஆளாவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதையடுத்து, இரண்டு மாதங்களுக்குப் பின்னர், தற்போது, ஊரடங்கு சற்று தளர்த்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, உள்ளூர் போக்குவரத்துக்கு எந்த தடையும் இல்லை. உறவினர்களைப் பார்க்கச் செல்லலாம். உணவகங்களில் பார்சல்கள் கிடைக்கும். பூங்காக்கள் திறக்கப்படும். சிறு கடைகள் திறக்கப்படும் என்று அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அங்கு இயல்புநிலை திரும்பி வருகிறது. வீடுகளில் முடங்கியிருந்த 40 லட்சம் பணியாளர்கள் தங்கள் பணிகளுக்கு திரும்பியுள்ளனர். வீட்டில் அடைப்பட்டிருந்த மக்கள், முகக் கவசங்கள் அணிந்தபடி வெளியில் நடமாடத் துவங்கியுள்ளனர்.
புதிதாக வைரஸ் தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், அந்நாட்டில் தினமும் 1,500க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து வருவது குறிப்பிடத்தக்கது.