சென்னை:
இ-பாஸ் பெறுவது எப்படி என்பது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறினார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசியவர், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்டவர்கள் அத்யாவசிய பாஸ் பெறுவது பற்றி விரிவான அறிவிப்பு வெளியிடப்படும் என்று கூறியவர், . சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பாஸ் வழங்க எங்களுக்கு அதிகாரம் உள்ளது என்று என்றார்.

சென்னையில் இருந்து வெளிமாவட்டங்கள் செல்ல tnepass.tnega.org என்ற இணையதளத்தை அணுகலாம். வீட்டு வேலையில் உள்ளவர்கள் நேரடியாகவோ உரிமையாளர் மூலம் விண்ணப்பிக்கலாம் .
வெளி இடங்கில் இருந்து இங்கு வந்து சிக்கி தவிப்பவர்களுக்கு பாஸ் வழங்க முன்னுரிமை அளிக்கப்படும்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட கல்லூரிகளில் 4000 படுக்கைகள் தயார் நிலையில் இருக்கின்றன.
படிபடியாக பள்ளிகள், திருமண மண்டபங்களிலும் படுக்கை வசதி ஏற்படுத்தப்படும்.
மாநகராட்சியில் உள்ள 750 திருமண மண்டபங்களிலும் படுக்கை வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அடுத்த வாரத்திற்குள் 10 ஆயிரம் படுக்கைகளும், மே மாதத்திற்குள் 50 ஆயிரம் படுக்கைகளும் தயார் படுத்தப்படும்.
இருப்பிடத்தை தயார்ப்படுத்துவது, நோயாளிகளுக்கான வசதிகளை செய்து தருவதே மாநகராட்சியின் பணிகள். மற்றவைகள் சுகாதாரத்துறையின் பணிகள்.
வெளிமாநில தொழிலாளர்கள் சென்னை முகாமில் மட்டுமே 5000 பேர் உள்ளனர். அவர்களை சொந்த ஊருக்கு திரும்ப செல்ல முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
டீக்கடைகள், சலூன் கடைகள், பேன்சி கடைகள் எல்லாம் தனிக்கடைகள் பட்டியலில் வராது. அவைகள் திறக்கப்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.
Patrikai.com official YouTube Channel