
சென்னை: தமிழக தலைநகரிலுள்ள 747 திருமண மண்டபங்களுக்கு, சென்னை மாநாகராட்சி சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கொரோனாவுக்காக தனிமைப்படுத்தும் இடங்களாக மாற்றுவதற்கு அவை எடுத்துக்கொள்ளப்படும் என்பதற்காக இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்தகவலை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.
சில தனியார் பள்ளிகள், விற்பனையாகாத, அதேசமயம் கட்டிமுடிக்கப்படாத வீடுகள் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்களை கொரோனா தனிமை வார்டுகளாக மாற்றப்படும் நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சென்னையிலுள்ள 747 திருமண மண்டபங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel