
வெலிங்டன்: நியூசிலாந்து நாட்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருது ராஸ் டெய்லருக்கு வழங்கப்பட்டுள்ளது.
சர்வதேச போட்டிகளில் சிறப்பாக சாதித்தவர்களுக்கான ‘சர் ரிச்சர்டு ஹாட்லி’ என்ற பெயரிலான விருதை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் வழங்கியது. இதில் சிறந்த வீரருக்கான விருது, அந்நாட்டின் அதிரடி வீரர் ராஸ் டெய்லருக்கு கிடைத்தது.
இவர், மூன்றுவித கிரிக்கெட் போட்டிகளிலும், 100 அல்லது அதற்கு மேலான போட்டிகளில் பங்கேற்ற முதல் சர்வதேச வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
இவருக்கு இந்த விருது கிடைப்பது இது மூன்றாவது முறை. டெஸ்ட் போட்டிகளில் இவர் குவித்துள்ள மொத்த ரன்கள் 7328. இவர், ஏற்கனவே சிறந்த டி-20 வீரர் விருதைக் கைப்பற்றியிருந்தார்.
கடந்த சீசனில் மட்டும் ராஸ் டெய்லர், மூன்றுவித கிரிக்கெட் போட்டிகளிலும் சேர்த்து, மொத்தம் 1826 ரன்களைக் குவித்தார் என்பது கவனிக்கத்தக்கது.
Patrikai.com official YouTube Channel