தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்திற்கு நேற்று (மே 1) பிறந்த நாள். அவர் தனது 49-வது பிறந்த நாளைக் கொண்டாடினார்.
ட்விட்டரில் #HBDDearestThalaAJITH என்ற ஹேஷ்டேக்கில் அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்து குவிந்து வந்தது. இதனிடையே பல முன்னணி திரையுலக பிரபலங்களும் தங்களுடைய வாழ்த்தைத் தெரிவித்தனர்.


இந்நிலையில் நடிகர் அஜித்துக்கு துணைமுதல்வரின் மகனும், தேனி தொகுதியின் எம்.பி.யுமான ஓ.பி.ரவீந்திரநாத் குமார் வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், “இன்று பிறந்தநாள் காணும் நண்பர் அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் அவர்கள், நீண்ட ஆயுளோடு பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]